மீண்டும் மாட்டை வேட்டையாடிய புலி - மக்கள் அச்சம்

x

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே 20 மாடுகளை வேட்டையாடிய புலியை வனத்துறையினர் பிடித்து காட்டில் விட்ட நிலையில், மீண்டும் ஒரு மாடு வேட்டையாடப்பட்டது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. சமீபத்தில் கூண்டில் கிக்கிய புலியை, வனத்துறையினர் முதுமலை வனப்பகுதிக்குள் விட்டனர். இந்நிலையில் சர்கார் மூலை பகுதியில் மேலும் ஒரு மாட்டை புலி வேட்டையாடியது. இதனால் வனப்பகுதிக்குள் விடப்பட்ட அதே புலிதானா என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்