காலேஜ் தோழிக்கு தாலி... அடுத்த பெண்ணுக்கு கொக்கி.. சிக்கிய சீட்டிங் வாலிபன்
சென்னையில், கல்லூரியில் உடன் படித்த பெண்ணை ரகசிய திருமணம் செய்துவிட்டு, அவருடன் சேர்ந்து வாழாமல் 2வது திருமணம் செய்ய முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். தண்டலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்த அருண் அழகம் பெருமாள், அதே கல்லூரியில் படித்த பெண்ணை காதலித்து பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்துள்ளார். ஆனால், மாற்று சாதி என்பதால் பெற்றோர் ஒப்புக்கொள்ளவில்லை எனக்கூறி, அவருடன் சேர்ந்து வாழாமல் தவிர்த்து வந்த அருண் அழகம் பெருமாள், வேறொரு பெண்ணுடன் 2வது திருமணம் செய்ய முயன்றுள்ளார். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், அருண் அழகம் பெருமாளை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
Next Story
