Tidel Park | Chennai | டைடல் பார்க்கில் ஆக்சஸ் டெக்னாலஜி நிறுவனம் விரிவாக்கம்
டைடல் பார்க்கில் ஆக்சஸ் டெக்னாலஜி நிறுவனம் விரிவாக்கம் சென்னை டைடல் பார்க்கில் ஆக்சஸ் டெக்னாலஜி அலுவலக விரிவாக்கத்தை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் மேலாண் இயக்குநர் ஜெ. வெங்கடேசன் ஆகியோர் திறந்து வைத்தனர். தொழில்நுட்பப் பயிற்சி மற்றும் மென்பொருள் தீர்வுகளில் முன்னணி வகிக்கும் ஆக்சஸ் டெக்னாலஜி நிறுவனம், டைடல் பார்க்கில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளது. இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் மா. சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, விரிவாக்கப்பட்ட அலுவலகத்தை திறந்துவைத்தார். கடந்த பல ஆண்டுகளாக, ஆக்சஸ் டெக்னாலஜி நிறுவனம் திறன் மேம்பாடு, தொழில் சார்ந்த பயிற்சிகள் மற்றும் மென்பொருள் சார்ந்த தொழில்நுட்ப சேவைகளில் நம்பிக்கைக்குரிய நிறுவனமாக வளர்ந்து வருகிறது. பட்டதாரிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் தேவைகளுக்கேற்ற நடைமுறை சார்ந்த பயிற்சிகள் மற்றும் டிஜிட்டல் தீர்வுகளை வழங்குவதில் இந்நிறுவனம் முக்கியப் பங்காற்றி வருகிறது. இந்த விரிவாக்கம் குறித்து கூறிய ஆக்சஸ் டெக்னாலஜி நிறுவன நிர்வாகக் குழுவினர், டைடல் பார்க் போன்ற தொழில்நுட்பச் சூழலில் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்தியிருப்பது, புதிய வாய்ப்புகள் மற்றும் தொழில்துறை இணைப்புகளை உருவாக்க உதவும் என நம்பிக்கை தெரிவித்தனர்.
