

ரஜினிகாந்த் வந்தால் மட்டுமே, தமிழக அரசியலில் மாற்றம் வரும் என்று துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார். திருச்சியில் அந்தப் பத்திரிகையின் பொன்விழா சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் குருமூர்த்தி, தமிழருமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய குருமூர்த்தி, அதிமுக அரசை கலைத்துவிட்டு ஆளுநர் ஆட்சியை கொண்டு வந்தாலும், தமிழகத்தில் மாற்றம் ஏற்படாது என்றார். ரஜினி வந்தால் மட்டுமே மாற்றம் ஏற்படும் என்று அவர் கூறினார்.