``அள்ளி போடு..அள்ளி போடு’’ முரட்டு திருட்டால இருக்கு..நகைக்கடையில் அசால்ட் செய்த கேடி லேடிகள்

x

திருப்பூர் அருகே நகை கடை ஒன்றில், ஒரு கிலோ வெள்ளி பொருள்களை திருடிய வழக்கில் நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவிநாசி அருகே செயல்பட்டு வரும் நகை கடை ஒன்றில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு கிலோ வெள்ளி பொருள்கள் திருடப்பட்டது. இது குறித்த புகாரின் அடிப்படையில், கடையின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, நான்கு பெண்கள், கொலுசு உள்ளிட்ட வெள்ளி பொருள்களை திருடும் காட்சி இடம்பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து, ஈரோட்டை சேர்ந்த கலைவாணி, ஜெயமாலா, தாரணி, ஷோபனா உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். தற்போது, நான்கு பெண்களும் கடையில் திருடும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், ஜெயமாலா மீது ஏற்கனவே திருட்டு வழக்கு பதிவாகியுள்ளது குறிப்பிடதக்கது.


Next Story

மேலும் செய்திகள்