திருச்சியை தெறிக்கவிட்டு சேலம் த்ரில் வெற்றி
டி.என்.பி.எல்: திருச்சியை வீழ்த்தி, திரில் வெற்றி பெற்ற சேலம்
கோவையில் நடைபெற்ற டி.என்.பி.எல் 7வது போட்டியில், திருச்சி அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சேலம் அணி திரில் வெற்றி பெற்றது. டாஸ் வென்று பவுலிங்கை திருச்சி அணி தேர்வு செய்த நிலையில், மழை காரணமாக 25 நிமிடம் தாமதமாக தொடங்கியது. பின்னர், முதலில் பேட்டிங் செய்த சேலம் அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து,180 வெற்றி இலக்குடன் களமிறங்கிய திருச்சி அணி, 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம், 7 ரன்கள் வித்தியாசத்தில் சேலம் அணி வெற்றி பெற்றது.
Next Story