சாக்குப்பையுடன் நின்றிருந்த 3 பெண்கள்.. சுத்து போட்டு பிடித்த போலீஸ்
தேனி மாவடடம் கம்பத்தில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 22 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். ஆந்திராவில் இருந்து கம்பம் வழியாக கஞ்சா கடத்துவதாக காவல் ஆய்வாளருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காமயகவுண்டன்பட்டி செல்லும் சாலையில் சந்தேகப்படும்படி சாக்குப்பையுடன் நின்றிருந்த 3 பெண்கள் உட்பட நான்கு பேரை சோதனை செய்த போலீசார் 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விசாரணையில் இவர்கள் ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்த முயன்றது தெரியவந்தது. அதன் அடிப்படையில் போலீசார் 4 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story