காணாமல் போன 3 ஐம்பொன் சிலைகள் மீட்பு...

திருவாரூரில் கோயிலில் இருந்து காணாமல் போன 3 ஐம்பொன் சிலைகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டுள்ளனர்.
காணாமல் போன 3 ஐம்பொன் சிலைகள் மீட்பு...
Published on

திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் உள்ள சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் இருந்த காத்தவராயன், ஆரியமாலா உள்ளிட்ட 5 ஐம்பொன் சிலைகள், கடந்த 2017-ம் ஆண்டு திருடு போயின. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, கோயிலின் அருகே உள்ள குளத்தை தூர்வாரிய போது, காணாமல் போன சின்னான் மற்றும் விநாயகர் ஆகிய இரண்டு சிலைகள் மீட்கப்பட்டன. இதனிடையே, திருவாரூரை அடுத்த சிறுபுலியூர் கிராமத்தை சேர்ந்த அகிலன் என்பவரிடம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவலின் பேரில், வள்ளிக்கந்தன் என்பவரது வீட்டில் இருந்து இரண்டு சிலைகளையும், ரீட்டாமேரி என்பவரின் வீட்டிலிருந்து மற்றொரு சிலையையும் போலீசார் கைப்பற்றினர். இந்த சிலை திருட்டில் தொடர்புடைய கோயில் கணக்காளராக பணியாற்றிய ரமேஷ் மற்றும் பாலா, மணிவண்ணன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com