கணவனை காப்பாற்ற சென்ற 7 மாத கர்ப்பிணியும் மரணம்.. வளைகாப்பு அன்றே பிரிந்த 3 உயிர்கள்

x

விருதுநகர் மாவட்டம் காரிசேரி பகுதியில், மாரியம்மன் கோயில் திருவிழாவின் 45 வது நாள் மண்டல பூஜைக்காக மைக்செட் போட்டபோது, மின்சாரம் தாக்கி 7 மாத கர்ப்பிணி உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் மைக்செட் உரிமையாளரான திருப்பதி என்பவரை காப்பாற்ற முயன்ற அவரது மனைவி லலிதா, அவரது பாட்டி பாக்கியம் என 3 பேருமே மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில், இவரது மனைவி லலிதா 7 மாத கர்ப்பிணி என்பதும், வளைகாப்பு நடந்த அதே நாளில் அவர் உயிரிழந்ததும் மற்றொரு சோகம். மேலும், உயிரிழந்த திருப்பதியின் சகோதரர் தர்மர், உறவினரான கவின்குமார் ஆகிய 2 பேர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் படுகாயங்களுடன் இருவரும், விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இச்சம்பவம் குறித்து ஆமத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்