மின்சாரம் தாக்கி 3 மாடுகள் பலி - போலீசார் விசாரணை
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மின்சாரம் தாக்கி 3 மாடுகள் இறந்துள்ளது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வளத்தகாடு கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவருக்கு சொந்தமான 3 மாடுகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது. சம்பவம் அறிந்த காவல் துறையினர், வருவாய் துறையினர் மற்றும் மின்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் தாக்கி 3 மாடுகள் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
