01பட்டா கேட்டு மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்

x

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பட்டா கேட்டு உயர் மின் அழுத்த கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த நாகராஜன் என்பவரால் பரபரப்பு ஏற்பட்டது. வடிவீஸ்வரம் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் 2 தலைமுறையாக வசித்து வரும் நிலையில் பட்டா கேட்டு வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நாகராஜன் திடீரென உயர் மின் அழுத்த கோபுரத்தில் மீது ஏறி உள்ளார். பின்னர், தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் வருவாய் துறையினர் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தி நாகராஜனை கீழே இறக்கியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்