உயிருக்கு அச்சுறுத்தல் - அதிமுக உறுப்பினர் பேச்சால் சலசலப்பு
தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மாமன்ற கூட்டத்தில் பேசிய அதிமுக உறுப்பினரால் சலசலப்பு ஏற்பட்டது.சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் அதிமுகவை சேர்ந்த 24வது வார்டு உறுப்பினர் சேட்டு பேசும் போது வார்டில் தூய்மை பணி சரிவர செய்யப்படவில்லை என்றும் இது தொடர்பாக ஒப்பந்தம் செய்துள்ள தனியார் நிறுவனத்திடம் முறையிட்டால் மிரட்டுகிறார்கள் என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட மேயர் ப்ரியா நேரம் முடிந்துவிட்டது அமருங்கள் என கூறினார். ஆனால் தொடர்ந்து பேசிய சேட்டு தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மீண்டும் தெரிவித்ததால் திமுக உறுப்பினர்கள் சேட்டுவை அமர சொல்லி சத்தம் எழுப்பினர். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.
Next Story
