Tiruchendur திருச்செந்தூருக்கு படையெடுக்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்..அப்படி என்ன விசேஷம் இன்று?
திருச்செந்தூருக்கு படையெடுக்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்... அப்படி என்ன விசேஷம் இன்று? திருச்செந்தூர் முருகன் கோவிலில் வளர்பிறை சஷ்டி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். சுமார் 6 மணி நேரம் காத்திருந்து முருகனை தரிசனம் செய்து வருகின்றனர். இன்று முருகனை வழிபட உகந்த நாளாக கருதப்படும் வளர்பிறை சஷ்டி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வந்த வண்ணம் உள்ளனர். கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. பக்தர்கள் திருச்செந்தூர் கோவில் கடலில் நீராடி சுமார் ஆறு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் கோவில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் திருவிழா போல காட்சியளிக்கிறது.
