நீரிலேயே செத்து மிதக்கும் ஆயிரக்கணக்கான மீன்கள்.. நெளியும் புழுக்கள்.. அதிர்ச்சி காட்சி

x

Fish Issue | நீரிலேயே செத்து மிதக்கும் ஆயிரக்கணக்கான மீன்கள்.. நெளியும் புழுக்கள்.. அதிர்ச்சி காட்சி

ஏரியில் ரசாயனக் கழிவு கலப்பு - செத்து மிதக்கும் மீன்கள்

விழுப்புரத்தில் உள்ள பொன்னேரி ஏரியில், புதிய பேருந்து நிலையம் மற்றும் பிராந்தி தயாரிப்பு ஆலையிலிருந்து வெளியேறும் ரசாயனக் கழிவுநீர் கலப்பதால் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

மீன்கள் செத்து மிதப்பதால், ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதுடன், மக்களின் உடல்நலத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

மீன் வளர்ப்பு குத்தகைதாரருக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால், ரசாயனக் கழிவுநீர் கலந்த ஆலை மீது நடவடிக்கை எடுத்து, நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்