RN Ravi | ``தமிழகத்தில் முனைவர் பட்டம் பெறுபவர்களுக்கு திறமையே இல்லை’’ ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

x

இந்திய நாட்டின் வெற்றியாக உள்ள, ஆபரேஷன் சிந்தூரை உலகமே ஏற்றுக் கொண்டது. ஆனால் நம் உள் நாட்டில் சில எதிர்க்கட்சிகள் கேள்விகள் மற்றும் சந்தேகங்களை எழுப்பி வருகிறார்கள் என தமிழக ஆளுநர் ரவி குற்றஞ்சாட்டினார். சென்னை தியாகராய நகர் கிருஷ்ண கான சபாவில் Chennai Citizens Forum என்ற அமைப்பு சார்பில் போர்க்களத்திலிருந்து இராஜதந்திரம் வரை என "ஆபரேஷன் சிந்தூர்" வெற்றி குறித்து சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டில் 20 அரசு பல்கலைக்கழகங்கள் உள்ளன என்றும் அதிலிருந்து 7 ஆயிரம் பேர் முனைவர் பட்டம் பெறுகிறார்கள் என்றும் ஆனால் அதற்கேற்ற கல்வியறிவும், திறமையும் இல்லை என்றும் விமர்சனங்களை முன்வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்