முதலமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்றவர்கள் கைது

x

சென்னை ஆழ்வார்பேட்டையில் முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட முயன்றவர்களால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் செஞ்சிவாடி கிராமத்தில், தங்களது நிலத்தை ஆக்கிரமித்துள்ள பாலசுப்பிரமணியன் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

முதல்வர் வீட்டின் முன் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளை கைது செய்து, தேனாம்பேட்டை சமூக நல கூடத்தில் அடைத்தனர். விளைநிலத்தை ஆக்கிரமித்த பாலசுப்பிரமணியன், நடிகர் சத்யராஜின் உறவினர் என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்