

ஸ்டெர்லைட் தொடர்பான தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு, தமிழக அரசு காட்டிய மெத்தனத்தின் விளைவு என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பதிவிட்டுள்ள அவர், இனியாவது முறையாக சட்டப் போராட்டத்தை தமிழக அரசு நடத்த முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். தருண் அகர்வால் குழு பரிந்துரை தமிழக அரசுக்கு ஏற்பட்ட அவமானம் என்றும், இப்படி நடக்கும் என்பதால் தான் அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தொடர்ந்து தாம் வலியுறுத்தி வந்ததாகவும் ஸ்டாலின் தமது பதிவில் சுட்டிக்காட்டி உள்ளார்.