குளம் போல் காட்சியளிக்கும் தனியார் பள்ளி.. தீயாய் பரவும் அதிர்ச்சி வீடியோ

x

குளம் போல் காட்சியளிக்கும் தனியார் பள்ளி.. தீயாய் பரவும் அதிர்ச்சி வீடியோ

தூத்துக்குடி மாவட்டத்தில், தனியார் பள்ளி ஒன்றில் தேங்கியுள்ள மழைநீர் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தூத்துக்குடியில் கடந்த 13 மற்றும் 14ஆம் தேதிகளில் ஏற்பட்ட மழையால், பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. இந்நிலையில், மில்லர்புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தண்ணீரானது குளம் போல் தேங்கி உள்ளது. பள்ளியின் உணவு விடுதிகளில் ஆசிரியர்களும் மாணவர்களும் தேங்கிய மழைநீருக்கு இடையே, பெஞ்சில் அமர்ந்து உணவருந்துகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்