Thoothukudi SP | ஒரே நாளில் இத்தனை மாற்றமா? பவரை காட்டிய SP ஆல்பர்ட் ஜான்
தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்டம் முழுவதும் பணியாற்றிவரும் ரைட்டர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஏற்கனவே நடந்த கூட்டத்தில் உயர் அதிகாரிகள் கேட்கும் தகவல்களை அளிக்க காவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், உரிய பதில் அளிக்காமலும், தகவல்கள் தெரிவிக்காமலும் இருந்த 13 காவலர்களை, மாவட்ட காவல் கண்காணிபாளர் ஆல்பர்ட்ஜான் அதிரடியாக ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
