Thoothukudi | நீதிமன்ற தீர்ப்பையும் மீறி இடித்து நொறுக்கப்பட்ட கடை - பகீர் CCTV-யால் பரபரப்பு
Thoothukudi | நீதிமன்ற தீர்ப்பையும் மீறி இடித்து நொறுக்கப்பட்ட கடை - பகீர் CCTV-யால் பரபரப்பு
தூத்துக்குடி சின்னமணி நகரில், உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மீறி தனிநபர் ஒருவருக்குச் சொந்தமான கட்டிடத்தை, அண்டை வீட்டார் ஜேசிபி மூலம் இடித்ததாக கூறப்படும் நிலையில், அது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. தங்கராஜ் என்பவரின் 5 சென்ட் நிலத்தை வேலு என்பவர் ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தங்கராஜிற்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில், பக்கத்து நிலத்தைச் சேர்ந்த வேலு மற்றும் அவரது மகன்கள் ஆட்களுடன் வந்து, தங்கராஜின் கடை மற்றும் காம்பவுண்ட் சுவரை அத்துமீறி இடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
