Thoothukudi | திருச்செந்தூர் அருகே அதிர்ச்சி.. மாயமான ரூ.27 லட்சம் மதிப்புள்ள பொருள்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உப்பளத்தில் இருந்த தொள்ளாயிரம் டன் உப்பு திருடப்பட்டுள்ளது. ஆறுமுகநேரி பகுதியில் உள்ள மகேஷ் என்பவரது உப்பளத்தில் இருந்து 900 டன் உப்பை 9 பேர் கொண்ட கும்பல் திருடியுள்ளது. இந்த உப்பின் விலை மதிப்பு ரூபாய் 27 லட்சம் என கூறப்படுகிறது. இந்நிலையில், உப்பள உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 8 பேருக்கு போலீசார் வலைவீசியுள்ளனர்.
Next Story
