வெளுத்து வாங்கிய கனமழை.. குளம் போல் மாறிய பள்ளி வளாகம் - தீர்வு என்ன?

x

தூத்துக்குடியில் அமைந்துள்ள அரசு பள்ளி ஒன்றில் பல மாதங்கள் ஆகியும் மழை நீர் அகற்றப்படாத அவலம் நடந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படும் சீ.வா. அரசு பள்ளியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பெய்த மழை காரணமாக வெள்ள நீர் தேங்கி நின்றது. ஆனால் இன்று வரை மழை நீர் அகற்றப்படாத நிலையில் பள்ளி வளாகம் பாசி படர்ந்து குளம் போல மாறிவிட்டது. கொசு உற்பத்தியும், நோய் பாதிப்பும் தற்போது அதிகரித்து விட்ட நிலையில் விரைவில் இதற்கு தீர்வு காணும்படி அரசுக்கு கோரிக்கை எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்