Thoothukudi | ரூ.29 கோடி மோசடி.. கூட்டுறவு வங்கிக்கு பூட்டு போட்ட பொதுமக்கள்

Thoothukudi | ரூ.29 கோடி மோசடி.. கூட்டுறவு வங்கிக்கு பூட்டு போட்ட பொதுமக்கள்

ரூ.29 கோடி மோசடி.. கூட்டுறவு வங்கிக்கு பூட்டு போட்ட பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்டம் குரும்பூரில் உள்ள கூட்டுறவு வங்கியில் 29 கோடி மதிப்பிலான நகை பணம் மோசடி குற்றம்சாட்டி, கூட்டுறவு வங்கியை பூட்டி பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். திருச்செந்தூர் அருகே உள்ள குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடந்த 2021 ம் ஆண்டு பொதுமக்களின் 548 நகை பைகள் மாயமானது. போலி கணக்கை உருவாக்கி 2 கோடியே 3 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரிய வந்தது. மேலும் வைப்பு நிதி இருப்பது போன்று போலியாக கணக்கு உருவாக்கி 27 கோடி ரூபாய் என மொத்தம் 29 கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது.

X

Thanthi TV
www.thanthitv.com