Thoothukudi | Road Issue | தூத்துக்குடியில் அதிர்ச்சி - பயந்து பயந்து செல்லும் மக்கள்

x

2023 ஆம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சேதமடைந்த ஏரல் தாமிரபரணி ஆற்றுப்பாலம் சீரமைக்கப்பட்ட 2 மாதத்தில் மீண்டும் சேதமடைந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஏரல் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றுப்பாலம் சேதமடைந்துள்ளது. ஏற்கனவே சேதமடைந்த பாலத்தை 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதுப்பித்திருந்த நிலையில் மீண்டும் சேதமடைந்ததால் மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். இந்த நிலையில் ஆற்றுப்பாலத்தை விரைந்து சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்