இடி மின்னலுடன் திடீர் கனமழை..சரிந்த கோயில் திருவிழாவின் முக்கிய விஷயம் - அதிர்ச்சியில் மக்கள்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே, கனமழையால் மரங்கள் முறிந்து விழுந்தன. திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான பரமன்குறிச்சி, உடன்குடி, குலசேகரபட்டினம், ஆத்தூர், காயல்பட்டினம், குரும்பூர் உள்ளிட்ட இடங்களில் நேற்றிரவு, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னலுடன் கனமழை பெய்தது. ஆத்தூரில் கோவில் திருவிழா பந்தல் சூறைக்காற்றில் சரிந்து விழுந்தது. இதனிடையே, ஸ்ரீவைகுண்டம் தென்காலில் இருந்து பிரிந்து செல்லும் ஆத்துரங்கால் வாய்க்கால் கரையில் உடைப்பு ஏற்பட்டு, வயல்வெளிக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com