காவலர் சுப்பிரமணியன் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட வழக்கில் சாமிநாதன், பலவேசம், சுடலை கண்ணு ஆகிய மூவரை போலீசார் கைது செய்து, ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்கள் 3 பேரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் தமிழரசு உத்தரவிட்டார். பின்னர் மூவரும் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர்.