Thoothukudi| "குடும்பத்துல ஒருத்தருக்கு மட்டும் வருது..4 வருஷமா இப்படித்தான் இருக்கு.."-தொழிலாளர்கள்

x

மழையால் உப்பளத் தொழில் பாதிப்பு - தொழிலாளர்கள் வேலையிழப்பு

பருவம் தவறி பெய்த மழை மற்றும் வடகிழக்கு மழையால் தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பள தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தின் பிரதான தொழிலானது உப்பள தொழில்..

தூத்துக்குடி மாவட்டதில் வேம்பாரில் தொடங்கி ஆறுமுகநேரி வரை சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தியானது நடைபெற்று வருகிறது.

20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த தொழிலை மட்டுமே நம்பி உள்ளனர். தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் பருவம் தவறி பெய்து வரும் மழையால் உப்பு உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டு தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

இதனால், சுமார் 4 மாத காலத்திற்கு வேலை இருக்காது என்று வேதனை தெரிவிக்கும் தொழிலாளர்கள், அரசு அறிவித்த மழைக்கால நிவாரணம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை என்று கூறுகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்