

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருகோடி ரூபாய் நிதியிலான கட்டுமான பணிகளை கனிமொழி எம்.பி. துவங்கி வைத்தார். திருச்செந்தூர் அடுத்த மெஞ்ஞானபுரம் மேல்நிலை பள்ளிக்கு புதிய கட்டடம் அமைக்க 30 லட்சம் ரூபாயும் நிதியும், சாத்தான்குளத்தில், 75 லட்சம் ரூபாய் மதிப்பில் மேல் நிலைநீர் தேக்க தொட்டி அமைக்கும் பணிகளையும் கனிமொழி துவக்கி வைத்தார். தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கிய அவர், அடிக்கல் நட்டு பள்ளிக் கட்டடப் பணிகளை துவக்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட், ஹைட்ரோகார்பன் திட்டங்கள் குறித்து, அதிமுக அரசு மவுனமாக இருப்பதாக குற்றம்சாட்டினார்.