தூத்துக்குடி காவல்நிலையம் அருகே ஒருவர் வெட்டிக்கொலை : மர்மகும்பல் வெறிச்செயல்

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகே, நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராக வந்த நபர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி காவல்நிலையம் அருகே ஒருவர் வெட்டிக்கொலை : மர்மகும்பல் வெறிச்செயல்
Published on

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகே, நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராக வந்த நபர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டு கோரம்பள்ளம் கிராமத்தில் நடந்த கொலை வழக்கில் சிவக்குமார் என்பவர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். வழக்கின் விசாரணைக்காக இன்று நீதிமன்றம் சென்றபோது சிவகுமாரை, இருசக்கர வாகனத்தில் வந்த மர்மகும்பல் ஒன்று அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியோடியது. தென்பாகம் காவல் நிலையம் அருகே இந்த கொலை சம்பவம் நடைபெற்றது, அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com