Thoothukudi Latest News| ஒரே வாரத்தில் அடுத்தடுத்து 9 கொலைகள் - தூத்துக்குடிக்கு திடீர்னு என்னாச்சு?

ஒரே வாரத்தில் அடுத்தடுத்து 9 கொலைகள் - தூத்துக்குடிக்கு திடீர்னு என்னாச்சு?

#thoothukudinews #thoothukudilatestnews

தூத்துக்குடியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை நகைக்காக சொந்த அக்கா மகனே சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி கந்தன் காலனி மூன்றாவது தெருவை சேர்ந்த சசிகலா. மகளும் கணவரும் வெளியூரில் வேலை பார்ப்பதால் இவர் தனியாக வசித்து வந்துள்ளார். இந்தச் சூழலைப் பயன்படுத்தி அவரது சகோதரி மகனான விக்னேஸ் குமார் அவரைக் கொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த 4-பவுன் தங்க சங்கிலியை எடுத்து சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக விக்னேஷ்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக அடுத்தடுத்து 9 கொலைச் சம்பவங்கள் நடைபெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com