Thoothukudi | அரசு உயர் சிறப்பு மருத்துவமனை - துணை முதல்வர் திறந்து வைத்தார்

அரசு உயர் சிறப்பு மருத்துவமனை - துணை முதல்வர் திறந்து வைத்தார் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில்136 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டபட்ட உயர் சிறப்பு மருத்துவமனையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். 7 தளங்கள், 687 படுக்கை வசதிகள் மற்றும் 11 அறுவை சிகிச்சை அரங்குகளைக் கொண்ட இந்த மருத்துவமனையில், 15 கோடி ரூபாய் மதிப்பிலான நவீன மருத்துவ உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, செயற்கை கருத்தரிப்பு மையம், தாய்ப்பால் வங்கி மற்றும் குழந்தைகளுக்கான 145 சிறப்பு படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com