கூவாகம் மிஸ் திருநங்கை’ போட்டியில் பந்தயம் அடித்த தூத்துக்குடி தேவதை
கூவாகம் மிஸ் திருநங்கை 2025 - தூத்துக்குடியை சேர்ந்த சக்தி மிஸ் கூவாகமாக தேர்வு
விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் திருநங்கை 2025 நிகழ்ச்சியில், தூத்துக்குடியை சேர்ந்த சக்தி, மிஸ் கூவாகமாக தேர்வு செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்டத்தில், தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பின் சார்பில், மிஸ் திருநங்கை 2025 அழகுப்போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் நடிகர் விஷால் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும், வெளி மாநிலங்களை சேர்ந்த திருநங்கைகளும் இந்த போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தூத்துக்குடியை சேர்ந்த சக்தி என்பவர் முதலிடத்தையும், ஜோதா என்பவர் இரண்டாம் இடத்தையும், விபாஷா என்பவர் மூன்றாம் இடத்தையும் பெற்ற நிலையில், அனைவருக்கும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
