Thoothukudi | அரிவாளோடு வந்து பெட்ரோல் பங்க்-ஐ அடித்து நொறுக்கிய கும்பல் - பயத்தில் ஓடிய ஊழியர்கள்
தூத்துக்குடி அருகே பெட்ரோல் பங்க் அருகே சிறுநீர் கழித்ததை தட்டிக் கேட்டதால், கஞ்சா போதையில் இருந்த 10 பேர் கொண்ட கும்பல் பெட்ரோல் பல்கை அடித்து உடைத்து நொறுக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. தூத்துக்குடி, அரசடி பகுதியில் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில், பெட்ரோல் நிரப்ப வந்த மூன்று பேர், வாகன ஓட்டிகள் எரிபொருள் நிரப்பும் பகுதி அருகே சிறுநீர் கழித்ததை ஊழியர்கள் கண்டித்துள்ளனர். சுமார் ஒரு மணி நேரம் கழித்து 10 பேருடன் வந்த போதை கும்பல் பெட்ரோல் பங்க் உள்ளே நுழைந்து ஊழியர்களை கட்டை மற்றும் கத்தி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளது. மேலும் பெட்ரோல் பல்க் அலுவலகம் மற்றும் பெட்ரோல் பல்க் ஆகியவற்றை அடித்து உடைத்து விட்டு தப்பி ஓடி சென்று விட்டனர். இதைத்தொடர்ந்து தாளமுத்து நகர் காவல் துறையினர் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தப்பி ஓடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்
