ஊராட்சி தலைவர் பதவி போட்டியாளர்கள் மோதல் : ஒருவர் அடித்துக் கொலை

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர் தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில், ஒருவர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
ஊராட்சி தலைவர் பதவி போட்டியாளர்கள் மோதல் : ஒருவர் அடித்துக் கொலை
Published on

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர் தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில், ஒருவர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். மூவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. மாசானசாமி என்பவரது மனைவி லதாவும், அதே பகுதியைச் சேர்ந்த இளையராஜா என்பவரும் போட்டியிட்டுள்ளனர். இரு தரப்பினரிடையே பூசல் இருந்த நிலையில், மாசானசாமி ஆதரவாளர்களை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதைத் தொடர்ந்து, இளையராஜாவின் ஆதரவாளர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com