Thoothukudi | Bike | சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த பைக்- தூத்துக்குடியில் பரபரப்பு

x

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கொட்டும் மழைக்கு நடுவே, இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.

டூவீலர் ஒரக் ஷாப் நடத்தி வரும் ராஜா என்பவர், ஒரு கடையில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு பொருட்களை வாங்க சென்றபோது, அந்த வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. உடனடியாக அருகில் இருந்த வாய்க்காலில் சென்று கொண்டிருந்த நீரை எடுத்து தீயை முற்றிலுமாக அணைத்தார். மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்தும், இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்ததை மக்கள் அதிர்ச்சியுடன் பார்த்தனர். ஆனால், உதவிக்கு யாரும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்