Thoothukudi Beach Death | கடலுக்கு குளிக்க சென்ற 12 வயதுள்ள 3 சிறுவர்கள் கடலில் மூழ்கி பலி
கடலுக்கு குளிக்க சென்ற 12 வயதுள்ள 3 சிறுவர்கள் கடலில் மூழ்கி பலி
தூத்துக்குடி தாளமுத்து நகர் கடற்கரைக்கு குளிக்க சென்ற மூன்று பள்ளி மாணவர்கள், கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த நிலையில் கடலோர பாதுகாப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி கீதாஜீவன் நகர் பகுதியை சேர்ந்த ஒன்பது சிறுவர்கள், தாளமுத்து நகர் கடற்கரைக்கு குளிக்க சென்றுள்ளனர். அப்போது எழும்பிய ராட்சத அலை கடற்கரையில் குளித்து கொண்டிருந்த, 4 சிறுவர்களை கடலுக்குள் இழுத்து சென்றுள்ளது. அதில் ஒரு சிறுவன் தத்தளித்ததை பார்த்த மீனவர் படகில் சென்று காப்பாற்றியுள்ளார். ஆனால் 12 வயதான நரேன் ஸ்ரீகார்த்தி மற்றும் முகேந்திரன், 13 வயதான திருமணி ராஜ் ஆகிய சிறுவர்கள் ராட்சத அலையால் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். அதன் பிறகு தகவலின் பேரில் வந்த போலீஸார் 3 சிறுவர்களின் உடலையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே பகுதியை சேர்ந்த நண்பர்களான 3 சிறுவர்கள், கடலில் மூழ்கி பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
