Thoothukudi Accident | லிஃப்ட் கேட்டு வந்தவரும் சேர்ந்து சிக்கிய சோகம் - NH ரோட்டில் பரபரப்பு

x

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நின்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்து மீது மினி லாரி மோதியதில், 20 பேர் பலத்த காயமடைந்தனர்.

பீகாரை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்று விட்டு கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஓரமாக வாகனத்தை நிறுத்தினர். அப்போது அவ்வழியாக பழங்களுடன் வந்த மினி லாரி, சுற்றுலா பேருந்தின் பின்பக்கம் மோதியதில் இரு வாகனங்களும் அப்பளம் போல நொறுங்கின.

இந்த விபத்தில், மினி லாரி ஓட்டுநர் செந்தில்குமார், அதில் லிஃப்ட் கேட்டு வந்த ஏர்வாடியைச் சேர்ந்த மகாராஜன் மற்றும் சுற்றுலா பேருந்தில் இருந்த 18 பயணிகள் என மொத்தம் 20 பேர் காயமடைந்தனர். அதில், 9 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அனைவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் தூத்துக்குடி - விருதுநகர் மாவட்ட எல்லைப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்