Thoothukudi Incident | தூத்துக்குடி +2 மாணவி கொடூர கொ*ல | நேரில் உறுதியளித்த அமைச்சர்

தூத்துக்குடி +2 மாணவி கொடூர கொ*ல | நேரில் உறுதியளித்த அமைச்சர்

Thoothukudi Incident | தூத்துக்குடி +2 மாணவி கொடூர கொ*ல | நேரில் உறுதியளித்த அமைச்சர் #thoothukudi #harassment #protest #thanthitv பிளஸ் 2 மாணவி கொலை சம்பவம் - 10 மணி நேர மறியல் போராட்டம் வாபஸ் தூத்துக்குடி அருகே 12ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி நடைபெற்ற போராட்டம் அமைச்சர் கீதா ஜீவன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து கைவிடப்பட்டது. வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி கடந்த 10ஆம் தேதி மாலை வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில், மறுநாள் காட்டுப்பகுதியில் காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். முன்னதாக மாணவி மாயமானதாக பெற்றோர் அளித்த புகாரை உடனடியாக ஏற்காமல் அலட்சியம் காட்டியதாக விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரவீனா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதற்கிடையில், குற்றவாளிகளை விரைந்து கைது செய்யக் கோரி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்டோர் மாணவியின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் உறுதியளித்ததை தொடர்ந்து, 10 மணி நேரமாக நீடித்த போராட்டம் கைவிடப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com