Tholkappia Poonga | தொல்காப்பியப் பூங்காவில் உள்ள வசதிகள்..? தெரிந்ததும்; தெரியாததும்..
சென்னை, ராஜா அண்ணாமலை புரத்தில் திறக்கப்பட்டுள்ள தொல்காப்பியப் பூங்காவில் அனுமதி கட்டணம் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன
மாணவர்கள், பொது மக்கள் தொல்காப்பியப் பூங்காவில் வழிகாட்டுதலுடன் சுற்றிப் பார்க்க பார்வை நேரங்கள் மற்றும் குறிப்பிட்ட தினங்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி,சென்னை மாநகராட்சி பள்ளிகள் செவ்வாய் மற்றும் சனிக்கிழமையும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் வெள்ளி அன்றும், தனியார் பள்ளிகள் திங்கள்,புதன் மற்றும் ஞாயிற்று கிழமைகளிலும், காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள். இதற்காக 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்
இதே போன்று, பொது மக்களுக்கான வழிகாட்டப்பட்ட சுற்றுப்பயணம் வியாழன் மற்றும் பொதுவிடுமுறை தவிர பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரை அனுமதிக்கப்படும் என்றும், ஒரு நபருக்கு 20 ரூபாய் வரையும்
பொது மக்கள் நடைபயிற்சி செய்ய அதிகபட்சம் 100 நபர்கள் வரை, காலை 6.30 மணி முதல் 8 மணி வரையும்,மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையும் அனுமதிக்கப்படுவார்கள்
நடைபயிற்சிக்கு ஒரு மாதம் 500 ரூபாயும், ஆறு மாதங்களுக்கு 2500 ரூபாயும், 12 மாதங்களுக்கு 5000 ரூபாயும் வசூலிக்கப்படும்
வாகன நிறுத்துமிடத்தில், காருக்கு 20 ரூபாயும், சிற்றுந்து/பேருந்துகளுக்கு 50 ரூபாயும்,புகைப்பட கருவி எடுத்துச் செல்ல 50 ரூபாயும், ஒளிப்பட கருவி எடுத்துச் செல்ல 100 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும் என அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் நுழைவுசீட்டு கட்டணம், முன்பதிவு மற்றும் பிற விவரங்களை அறிய www.crrt.tn.gov.in என்ற இணையதளத்தை அணுகலாம்
