``இந்த முறை மிஸ் ஆகாது''.. வட சென்னை 2 பற்றி வெளிவந்த மாஸ் அப்டேட்
வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் விரைவில் வடசென்னை இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக இட்லி கடை இசை வெளியீட்டு விழாவில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த வடசென்னை திரைப்படம் பரவலாக கவனம் ஈர்த்தது. இதன் இரண்டாம் பாகம் குறித்து எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேசன் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும், விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Next Story
