``இதுதான் ஆணவக்கொலையின் ஆரம்ப புள்ளி'' - தமிழ்வாணன் பரபரப்பு பேட்டி
ஆணவக்கொலைகளை தடுக்க தனிச் சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் இயற்ற தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் அழுத்தம் கொடுக்கும் என ஆணையத்தின் தலைவர் முன்னாள் நீதியரசர் தமிழ்வாணன் தெரிவித்துள்ளார். நெல்லையில் ஐ.டி. ஊழியர் கவின் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இந்த ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது. முன்னதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஆணையத்தின் தலைவர் தமிழ்வாணன், ஆணவக்கொலைக்கு எதிரான சட்டம் என்பது அனைத்து சமுதாயத்திற்கும் தேவையான ஒன்று என தெரிவித்தார்.
Next Story
