நெல்லை கோதையாறு பகுதியில் இறந்து கிடந்த யானை, எவ்வாறு உயிரிழந்தது என்ற மர்மம் விலகி உள்ளது.
நீலகிரி ஓவேலி பகுதியில் 12 பேரை தாக்கி கொன்ற காட்டு யானை ராதாகிருஷ்ணன், மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட நிலையில், அது நெல்லை கோதையாறு வனப்பகுதியில் விடப்பட்டது. இந்நிலையில் கடந்த 18ம்தேதி அணைப்பகுதி அருகே யானை இறந்து கிடந்தது. அதன் காரணம் குறித்து பல்வேறு தகவல்கள் பரவலாக பேசப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது. அதில், சுமார் 20 அடி உயரத்தில் இருந்து யானை விழுந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. குறிப்பாக, யானையின் மண்டை ஓடு மற்றும் உடலின் பல இடங்களில் ஏற்பட்ட எலும்பு முறிவுகள், யானை உயிரிழக்க காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.