``இதுதான் மதுரை.. 40 வருசமா பண்ணிட்டு இருக்கேன்'' - சித்திரை திருவிழா ஆடைகள் தயாரிக்கும் இஸ்லாமியர்
உலக புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவில் மே 8 ஆம் தேதி மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம், மே 9 ஆம் தேதி திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது. இதில், முக்கிய நிகழ்வான கள்ளழகர் எதிர்சேவையும், வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளல் நிகழ்ச்சியும் மே 12ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த சூழலில், மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் விதமாக, 3 தலைமுறையாக சித்திரை திருவிழாவிற்கான ஆடைகளை தயார் செய்யும் தையல் கலைஞரான அமீர்ஜான், மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவிற்கான கொடியேற்றத்திற்கு பின்பு விற்பனை அதிகரிக்கும் என நம்பிக்கை கூறியுள்ளார்.
Next Story
