தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த அதிகாரிகள்... வியக்க வைத்த சென்சார் கருவி

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ, மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி உள்ளிட்ட அதிகாரிகள் பள்ளி வாகனங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் சென்சார் மூலம் செயல்படும் நவீன கருவியை கண்ட அதிகாரிகள், அனைத்து பள்ளி வாகனங்களிலும் இவ்வகையான கருவி செலுத்தப்பட வேண்டும் என கூறினர். மேலும் சுமார் 70 பள்ளிகளை சேர்ந்த 313 பள்ளி வாகனங்களில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், முதலுதவி பெட்டி, கேமரா, முகப்பு விளக்குகள், பிரேக் போன்றவை சரியாக இயங்குகிறதா என ஆய்வு செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com