மூடப்படும் ஓஎன்ஜிசி கிணறுகள் - மகிழ்ச்சியில் கிராம மக்கள்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள, காரியமங்கலம் கிராமத்தில் இயற்கை எரிவாயு எடுப்பதற்காக தோண்டப்பட்ட ஓஎன்ஜிசி கிணறுகள் மூடப்படும் என்று, அந்த நிறுவனத்தினர் இயக்குனர் மாறன் தெரிவித்துள்ளார். மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த எரிவாயு கிணற்றை நிரந்தரமாக மூடுவதற்கும், அங்குள்ள ongc யின் தளவாட பொருட்கள் அனைத்தையும் எடுத்துச் செல்ல வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்ததாக கூறினார். இதையடுத்து வட்டாட்சியர் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், அதில் ஓஎன்ஜிசி கிணறை பாதுகாப்பாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, கூறினார்.
Next Story
