அரசியல் கட்சியின் கல்வெட்டு அகற்றம் - சந்தேகத்தின் பேரில் ஒருவரை தாக்கிய தந்தை, மகன்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே பருத்தியூர் கிராமத்தில் உள்ள ஒரு அரசியல் கட்சியின் கல்வெட்டு உடைத்து அகற்றப்பட்டது.
அரசியல் கட்சியின் கல்வெட்டு அகற்றம் - சந்தேகத்தின் பேரில் ஒருவரை தாக்கிய தந்தை, மகன்
Published on

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே பருத்தியூர் கிராமத்தில் உள்ள ஒரு அரசியல் கட்சியின் கல்வெட்டு உடைத்து அகற்றப்பட்டது. இது குறித்து அந்த கல்வெட்டை நிறுவிய ராமச்சந்திரனும் அவரது மகன் ராஜப்பாவும், பருத்தியூரை சேர்ந்த குமார் என்பவரை பிடித்து விசாரித்துள்ளானர். அப்போது தகராறு ஏற்பட்டு குமாரை கட்டையை கொண்டு தந்தையும், மகனும் அடித்து கடுமையாக

தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த குமாரை இருவரும் மருத்துவமனைக்கு அழைத்து சென்று விபத்தில் காயமடைந்ததாக கூறி அனுமதித்துள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குமார் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ராமச்சந்திரனும், ராஜப்பாவும் குமாரை தாக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டதை அடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com