Thiruvarur | பைக்கில் ஃபாலோ செய்து சரமாரி வெட்டிய கும்பல் - ரத்தம் சொட்ட சொட்ட துடித்த நபர்

x

திருவாரூர் அருகே மாநில நெடுஞ்சாலையில் பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை மூன்று பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருத்துறைப்பூண்டியை சேர்ந்த கவாஸ்கர் என்பவர் தனது நண்பர் ஒருவரோடு இரு சக்கர வாகனத்தில் திருவாரூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் பின் தொடர்ந்து வந்து அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. விசாரணையில் சித்தாயீமூர் பகுதியை சேர்ந்தவர்கள் தாக்கியதும், கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட முன்விரோதமாக தாக்குதல் நடந்ததும் தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்