திருவாரூர் : கஜா புயல் நிவாரண தொகையில் மோசடி - கிராம நிர்வாக அலுவலர் மீது மக்கள் புகார்

திருவாரூர் அருகே கஜா புயல் நிவாரணத் தொகை வழங்கியதில் கிராம நிர்வாக அலுவலர் முத்து, மோசடி செய்ததாக, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினார்.
திருவாரூர் : கஜா புயல் நிவாரண தொகையில் மோசடி - கிராம நிர்வாக அலுவலர் மீது மக்கள் புகார்
Published on
திருவாரூர் அருகே கஜா புயல் நிவாரணத் தொகை வழங்கியதில் கிராம நிர்வாக அலுவலர் முத்து, மோசடி செய்ததாக, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினார். திருவாதிரை மங்கலம் பகுதி மக்கள், இது தொடர்பாக திருவாரூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றையும் அளித்தனர். 3 லட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட தொகையை மோசடி செய்தததோடு, நிவாரண பொருட்கள் வழங்குவதிலும் முறைகேட்டில் ஈடுபட்டதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர். தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக பெறப்பட்ட, கிராம நிர்வாக அலுவலர் கையெழுத்திட்டு மோசடி செய்த ஆவணங்களையும் அந்த புகார் மனுவுடன் அவர்கள் இணைத்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com