திருவாரூர் இடைத்தேர்தலுக்கு தடை கோரி முறையீடு: அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பாக நாளை வெளியாகவுள்ள அறிவிப்பானைக்கு தடை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
திருவாரூர் இடைத்தேர்தலுக்கு தடை கோரி முறையீடு: அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
Published on
திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பாக நாளை வெளியாகவுள்ள அறிவிப்பானைக்கு தடை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. கஜா புயல் நிவாரணப் பணிகள் முழுமையாக முடிவடையாத நிலையில், ஜனவரி 28ஆம் தேதி தேர்தல் நடத்தினால் நிவாரண பணிகள் பெரிதும் பாதிக்கப்படும் என்றும், அதுகுறித்து மனு தாக்கல் ஆனால், அதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் அமர்வு முன்பு மூத்த வழக்கறிஞர் பிரசாத் முறையிட்டார். இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், அவசர வழக்காக விசாரிக்கலாமா என்பதை சம்பந்தப்பட்ட நீதிபதிகள் முடிவெடுப்பார்கள் என பதில் அளித்தனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி தலைமை நீதிபதி தகில் ரமானி அமர்வில் சத்திய நாராயணனன் என்பவர் முறையிட்டார். சம்பந்தப்பட்ட அமர்வு எது என்பது பிற்பகலில் அறிவிக்கப்படும் என தலைமை நீதிபதி தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com