Thiruvarur | பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று கொ*ல - ஆடு மேய்க்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

x

Thiruvarur | பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று கொ*ல - ஆடு மேய்க்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

திருவாரூர் அருகே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று கொலை செய்த இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் பெருமாளகரம் பாண்டவையாறு அருகே ஆடு மேய்க்க சென்ற சுதா என்பவரை இரண்டு இளைஞர்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த முயன்று கொலை செய்தனர். இந்த வழக்கில் அஜித்குமார், முருகன் இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைதான இருவரும் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

இந்த ஆண்டில் இதுவரை 18 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் , சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்